விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு இடைத்தேர்தல் 27-ந் தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம்


விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள  11 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு இடைத்தேர்தல்  27-ந் தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு 27-ந் தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்



விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு 27-ந் தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காலிப்பணியிடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.4.2022 வரை காலியாக உள்ள முகையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காரணை ஊராட்சி வார்டு எண்-7, முகையூர் ஊராட்சி வார்டு எண்-8, விக்கிரவாண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஒரத்தூர் ஊராட்சி வார்டு எண்-4, முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண்-9, வி.பகண்டை ஊராட்சி வார்டு எண்-2, மரக்காணம் ஒன்றியத்தை சேர்ந்த மானூர் ஊராட்சி வார்டு எண்-6, செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த பொன்னங்குப்பம் ஊராட்சி வார்டு எண் 7,8,9, நரசிங்கராயப்பேட்டை ஊராட்சி வார்டு எண்-1, மேல்மலையனூர் ஒன்றியத்தை சேர்ந்த அன்னமங்கலம் ஊராட்சி வார்டு எண்-5 என மொத்தம் 11 காலியிடங்களுக்கான இடைத்தேர்தல்( தற்செயல்) தேர்தல்களை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல்

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 27-ந் தேதியாகும். 28-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 30-ந் தேதி மாலை 3 மணி வரை மனுக்கள் திரும்ப பெறப்படும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும், இதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதியும் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மேற்கண்ட 8 கிராம ஊராட்சிகள் முழுவதும் நடைமுறையில் இருக்கும். . இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story