நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x

அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

நகராட்சி அலுவகம் முற்றுகை

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து நடைபெறுவதாகவும், சரியாக தண்ணீர் வினியோகம் நடைபெறுவது இல்லை, மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் 26-வது வார்டு உறுப்பினர் ஜோதிசேதுராமன் தனது வார்டு பொதுமக்களுடன் சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் நகரமன்ற தலைவரை நேரில் சந்தித்து தங்களது பகுதியில் உள்ள குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

வாக்குவாதம்

இதனால் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகரமன்ற தலைவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ேபாராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கே.பி.சந்தோஷம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேதுராமன், பிலிப்ஸ், அஸ்லாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story