தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழா


தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழா
x

தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழா நடந்தது.

வேலூர்

ஜங்காலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழா நடந்தது

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், வேலூர் மாவட்ட தேசிய பசுமை படை மற்றும் ஹெல்பிங் ஹார்ட் டிரஸ்ட் இணைந்து தேசிய மாசுகட்டுப்பாடு தின விழாவை காட்பாடி ஜங்காலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சங்க், மாவட்ட தேசிய பசுமை படை இயக்குனர் மார்க்க சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவி பொறியாளர் சுஷ்மிதா, உதவி மேலாளர் பிரசாத், தன்னார்வலர்கள் பார்த்திபன், யுவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் செலஸ்டின் தாஸ் நன்றி கூறினார்.=


Next Story