கேபிள் டி.வி. வயர்கள் சரி செய்யப்படுமா?


கேபிள் டி.வி. வயர்கள் சரி செய்யப்படுமா?
x

கேபிள் டி.வி. வயர்கள் சரி செய்யப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசு கேபிள் டி.வி. வயர்கள் மின்கம்பங்களில் கட்டி வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல தெருக்களில் அந்த வயர்களை குரங்குகள் கடித்து விடுவதாலும், காற்று வேகமாக வீசுவதாலும் அறுந்து சாலையில் விழுந்து கிடக்கின்றன. இதில் விளாங்கார தெருவில் ஏராளமான கேபிள் டி.வி. வயர்கள் மின்கம்பங்களில் கட்டப்பட்டு பல இடங்களில் அறுந்து தொங்கிக்கொண்டுள்ளன. இந்த சாலையில் தினசரி அரசு கலைக்கல்லூரிக்கும், பள்ளிகளுக்கும், மற்ற பணிகளுக்கும் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனங்களிலும் வயர்கள் சிக்கிக்கொண்டு விபத்து ஏற்படுகிறது. மின்கம்பங்களில் அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம் மின்மாற்றிக்கு செல்கின்றன. கேபிள் டி.வி. வயர்களில் மின்சாரம் பாய்ந்தால் அதை மிதித்து செல்பவர்களுக்கு உயிர் இழப்பு ஏற்படும். காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இந்த சாலையில் போக்குவரத்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மழைகாலம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் கிடக்கும் கேபிள் டி.வி. வயர்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story