எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் எம்ஜிஆராக பார்க்கிறார்கள் - ராஜன் செல்லப்பா


எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் எம்ஜிஆராக பார்க்கிறார்கள் - ராஜன் செல்லப்பா
x

எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் எம்ஜிஆராக பார்க்கிறார்கள். எம்ஜிஆரின் குணங்களை எடப்பாடி பழனிசாமி பெற வேண்டும் என்று கருதும் தொண்டர்கள் மற்றும் மக்கள் அவரை எம்ஜிஆராக பார்க்கிறார்கள் என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறினார்.

எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் எம்ஜிஆராக பார்க்கிறார்கள். எம்ஜிஆரின் குணங்களை எடப்பாடி பழனிசாமி பெற வேண்டும் என்று கருதும் தொண்டர்கள் மற்றும் மக்கள் அவரை எம்ஜிஆராக பார்க்கிறார்கள் என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறினார்.அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக தொண்டர் ஒருவர் முழு மனதோடு எம் ஜி ஆரை பார்க்க வேண்டும் என்ற எண்ண உணர்வோடு, ஆசையில் அவருக்கு ஒரு தொப்பியும், மேலாடையும் அணிந்து அழகு பார்த்தார்கள். அதில் ஒரு தவறும் கிடையாது. அதற்காக யாரும் எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆருக்கு இணையானவர் என்று கூறவில்லை. எம்ஜிஆர் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.. ஆசைப்படுகிறோம். தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி புரட்சித் தலைவர் போல் இருக்க ஆசைப்படுகிறார்கள்...

தொண்டர்கள் அப்படி சொல்வதில் தவறில்லை.. அப்படி தவறு என்று பார்த்தால் கூட யாருக்கு அது அழகாக இருக்கிறது என்று பாருங்கள்.. அவருக்கு அழகாக இருக்கிறதா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா என்று.. எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் எம்ஜிஆராக பார்க்கிறார்கள். எம்ஜிஆரின் குணங்களை எடப்பாடி பழனிசாமி பெற வேண்டும் என்று கருதும் தொண்டர்கள், மக்கள் அவரை எம்ஜிஆராக பார்க்கிறார்கள். தொண்டர்களின் எதிர்பார்ப்பு இப்படி இருக்கும் போது அதை ஒரு குற்றமாக கூறுவது அவருக்கு அழகல்ல. இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறினார்.




Next Story