வால்பாறையில் கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்றது
வால்பாறையில் கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்றது
வால்பாறை
வால்பாறை அருகில் உள்ள காஞ்சமலை எஸ்டேட் வடக்கு பிரிவு 1-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதிக்கு வேலைக்கு சென்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்ட பகுதியில் கன்று குட்டி ஒன்றை சிறுத்தை கடித்து கொன்று போட்டு விட்டு போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் காஞ்சமலை எஸ்டேட் வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்டர் என்பவர் மேய்ச்சலுக்கு பசுமாட்டுடன் சென்ற தனது 2½ வயது பெண் கன்று குட்டி வீட்டுக்கு வரவில்லை என தேடி வந்துள்ளார். பின்னர் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை தாக்கி கிடந்த கன்று குட்டி தனது கன்று குட்டி தான் என்று அறிந்து இது குறித்து வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே விக்டருக்கு சொந்தமான 4 கன்று குட்டிகளையும் சிறுத்தை கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது. சம்பவயிடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் கன்று குட்டியின் உடல் கிடந்த தேயிலை தோட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் இரவு மற்றும் பகல் நேரத்தில் கால்நடைகளை வெளியே சுற்றித்திறிவதற்கு விடாமல் பட்டிகளில் அடைத்து வைத்து பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.