'மஞ்சப்பை விருதுகள்' பெற அழைப்பு


மஞ்சப்பை விருதுகள் பெற அழைப்பு
x

‘மஞ்சப்பை விருதுகள்' பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

"மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரால் சட்டப் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். குறிப்பாக விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு (CD) பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை வருகிற 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (https://ariyalur.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story