கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
x

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் வட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக 48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கோடை உழவு செய்வதனால் மண்ணின் ஆழத்தில் உள்ள சத்துக்களும், காற்றில் உள்ள சத்துக்களும் உறிஞ்சப்பட்டு மண்ணுக்குள் செல்கிறது. இதனால் மண் ஊட்டமேற்றப்படுகிறது. இதற்கு முன்பு பயிர்களுக்கு தெளித்த பூச்சிக்கொல்லி நச்சுக்கள், பயிர்கள் வெளியேற்றும் நச்சுக்கள் ஆகியவை மண்ணின் அடிப்பகுதியில் தேங்கி இருக்கும். இந்த நச்சுக்களை அழிக்க கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் தான் கோடை உழவு. மண்ணை புரட்டி விடும் போது மண் வெப்பமாகி பிறகு குளிர வேண்டும் என்பதுதான் அடிப்படை. மேலும் கோடை உழவு செய்வதின் மூலம் களைகள் மற்றும் பூச்சிகளை குறைக்கலாம். கடைசியாக செய்த பயிரை தாக்கிய பல்வேறு பூச்சிகளின் புழுக்கள், முட்டைகள், கூட்டு புழுக்கள் அனைத்தும் மண்ணில் இருக்கும். கோடை உழவில் மண் புரட்டப்படும் போது அவை மண்ணுக்கு மேல் வரும். அப்போது பறவைகள் மற்றும் சூரிய ஒளி மூலம் அவை அழிக்கப்படும். எனவே அனைத்து விவசாயிகளும் கோடை உழவு செய்யுமாறு அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story