கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக துணை நடிகைக்கு பாலியல் தொல்லை..! கேமராமேன் கைது


கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக துணை நடிகைக்கு பாலியல் தொல்லை..! கேமராமேன் கைது
x

வளசரவாக்கம் அருகே துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேமராமேனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

போரூர்:

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கும் வளசரவாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த கேமராமேன் காசிநாதன் (42) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது தனக்கு டைரக்டர்கள் நிறைய பேருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது, ஆகவே உனக்கு கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். மேலும் "போட்டோ ஷூட்" நடத்த வேண்டும் என்று கூறிய காசிநாதன் துணை நடிகையை தனது வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இதை உண்மை என்று நம்பிய துணை நடிகை நேற்று இரவு காசிநாதன் வீட்டிற்கு சென்றார். அப்போது மதுபோதையில் இருந்த காசிநாதன் திடீரென துணை நடிகையிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவரது பிடியிலிருந்து விலகி தப்பி ஓடிவிட்டார். மேலும் இதுகுறித்து அவர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் காசிநாதனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story