வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றும் (சனிக்கிழமை), வருகிற 18-ந் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றும் (சனிக்கிழமை), வருகிற 18-ந் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணி மாவட்டத்தில் தற்போது 76 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பணியை துரிதப்படுத்தும் நோக்கில் இன்றும் (சனிக்கிழமை), வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து வாக்குசாவடி நிலை அலுவலர்களும் வீடு,வீடாக சென்று களப்பணி மேற்கொண்டு வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை பெற்று 6பி படிவத்தில்உள்ளீடு செய்யும் பணி மேற்கொள்வார்கள்.

பயன்படுத்தி கொள்ளலாம்

இப்பணி தொடர்பாக படிவம் 6பி சேகரிக்கும் போது அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே பெற elector facing portals / Apps like NVSP, VHA ஆகியவற்றின் மூலம் இணைய வழி மூலம் நேரடியாக இணைக்கலாம். மேலும், இணைக்க தவறியவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் GARUDA App அல்லது படிவம் 6பி-ஐ சமர்ப்பித்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story