மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x

ராயக்கோட்டை அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு உதவி ஆணையர் (ஆயம்) பாலகுரு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். முகாமில் 60 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் தாசில்தார் குருநாதன், ஊராட்சி மன்றத்தலைவர் முனியப்பன், வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், மண்டல துணை தாசில்தார் மதன்ராஜ், வருவாய் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தனி தாசில்தார் கோபிநாத் நன்றி கூறினார்.

1 More update

Next Story