கழிவுகளில் உரம் தயாரிக்க பயிற்சி
கழிவுகளில் உரம் தயாரிக்க பயிற்சி நடந்தது.
சிவகங்கை
காரைக்குடி,
கோட்டையூர் பேரூராட்சி பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை தலைமையில் செயல் அலுவலர் கவிதா முன்னிலையில் செய்முறை செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், குடியிருப்போர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்காத கழிவுகளை உருவாக்குபவர்கள் ஆகியோருக்கு பேரூராட்சி வளமிகு பூங்காவில் சில கழிவுகளை உரமாக்குதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகள் வீடுகளிலும் கழிவுகளில் உரம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story