இன்று வேலைவாய்ப்பு முகாம்
இன்று வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்வார்கள். எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுனர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் இந்த முகாம்களில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்ப படிவம், போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வழங்குதல் ஆகியவை வழங்கப்படும். எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த முகாமில் தங்களது கல்வி சான்று குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அட்டையுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் பணி வாய்ப்பு பெறுபவர்களுக்கு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.