சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
முதுகுளத்தூர் அருகே பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள மருதகம் கிராமத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இ- சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது. முகாமில் குடும்ப அட்டை விண்ணப்பம் 5, பெயர் நீக்கம் 4, பெயர் சேர்த்தல் 1, குடும்ப அட்டையில் அலைபேசி எண் மாற்றம் செய்தல் விண்ணப்பம் 21, நகல் குடும்ப அட்டை விண்ணப்பம் 1, குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் 3, அங்கீகார சான்றிதழ் 2 என 37 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் தங்கம்மாள், தேரிரு வேலி உள்வட்ட வருவாய் அலுவலர் பெரியசாமி மற்றும் பொது வினியோகத் திட்ட தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story