வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முதல்நாள் சிறப்பு முகாம்
உடுமலை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முதல்நாள் சிறப்பு முகாம் நடந்தது. இதில் 3,440 பேர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.
உடுமலை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முதல்நாள் சிறப்பு முகாம் நடந்தது. இதில் 3,440 பேர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது.
சிறப்பு முகாம்
உடுமலை சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்கு சாவடிகளில் நடந்த முகாமை தாசில்தார் கண்ணாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடுமலை சட்டமன்ற தொகுதியில் நடந்த முகாம்களில் மொத்தம் 3 ஆயிரத்து 440 பேருடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உடனடியாக கருடா செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். சிறப்பு முகாமிற்கு வரும் போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்அட்டை, மொபைல் போன் ஆகியவற்றுடன் வரவேண்டும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்தி கொள்ளும்படி உடுமலை தாசில்தார்
கண்ணாமணி, தேர்தல் துணை தாசில்தார் சாந்தி ஆகியோர் வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.