ரேஷன் பொருள் வினியோக குறைதீர்க்கும் முகாம்


ரேஷன் பொருள் வினியோக குறைதீர்க்கும் முகாம்
x

ரேஷன் பொருள் வினியோக குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

ராமநாதபுரம்


தமிழக அரசின் உத்தரவின்படி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் கீழ்க்கண்ட கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. ராமநாதபுரம் தாலுகா-அச்சுந்தன்வயல் இ-சேவை மையம், ராமேசுவரம் தாலுகா- நடராஜபுரம்-ரேஷன்கடை, திருவா டானை தாலுகா-பதனக்குடி ரேஷன்கடை, பரமக்குடி தாலுகா- மஞ்சக்கொல்லை இ-சேவை மையம், முதுகுளத்தூர் தாலுகா-கொழுந்துரை இ-சேவை மையம், கடலாடி தாலுகா- நரிப்பையூர் ரேஷன்கடை, கமுதி தாலுகா- கீழராமநதி ஊராட்சிமன்ற கட்டிடம், கீழக்கரை தாலுகா- குத்துக்கல் வலசை ரேஷன்கடை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா- செங்குடி ரேஷன்கடை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மின்னணு ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் பிழைத் திருத்தம் செய்தல், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய ரேஷன்கார்டு நகல் கோரும் மனுக்களை அளித்து பயன்பெறலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் வருகிற 10-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணிஅளவில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து இந்த சேவையினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story