கால்நடைகளுக்கு மலடு நீக்க சிறப்பு முகாம்


கால்நடைகளுக்கு மலடு நீக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளுக்கு மலடு நீக்க சிறப்பு முகாம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தி ஒன்றியம் கோதூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர், நில வள திட்டம் பகுதி-2-ன் கீழ் கால்நடைகளுக்கான சிறப்பு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் அருண் பாலாஜி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கலைச்செல்வி, அனிதா மற்றும் கால்நடை ஆய்வாளர் திருநாவுக்கரசு, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு குடற்புழு நீக்க மருந்துகளை கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு அளித்தனர். மேலும் சினை ஆய்வு‌‌, கருவூட்டல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகளை அளித்தனர். கன்று மற்றும் மடி நோய் மேலாண்மை குறித்த ஆலோசனைகளும், கன்றுகளுக்கு உப்பு கட்டிகளும் வழங்கப்பட்டன. இதில் கோதூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வந்தனர்..


Next Story