ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்


ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

மயிலாடுதுறை

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்து அவருக்கு ஓய்வு கால பலன்களை முழுமையாக வழங்க வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்க போராட்டம் செம்பனார்கோவிலில் நடந்தது. போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டார தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுவில் ரத்த கையெழுத்திட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தனர். போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மாரி தட்சிணாமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பொன் ராஜேந்திரன், வட்டார செயலாளர் மாதவன், வட்டார மேலாளர் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story