பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
நாரலப்பள்ளியில் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் 8 இடங்களில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் அந்தந்த தாலுகா வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக மனுக்களை பெற்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் நாரலப்பள்ளி கிராமத்தில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் ரமேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வட்ட பொறியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ராஜா, சத்தீஷ், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் சக்தி மனோகரன், வார்டு உறுப்பினர் முனியப்பன், விற்பனையாளர்கள் பாலசுந்தரம், விஜயகுமார் கலந்து கொண்டனர். முகாமில் ரேஷன் கார்டில் புதிதாக பெயர் சேர்க்கை, நீக்கம், தொலைபேசி எண், முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனுக்குடன் நிவர்த்தி செய்தனர்.