மருத்துவ விழிப்புணர்வு முகாம்


மருத்துவ விழிப்புணர்வு முகாம்
x

மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் காத்தாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவ விழிப்புணர்வு ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், முதுகுளத்தூர் பேரூராட்சி தலை வருமான ஷாஜஹான் தலைமை தாங்கினார். காத்தாகுளம் ஊராட்சி தலைவர் இந்திராகாந்தி, துணைத் தலைவர் புயல் நாதன், கிராமத்தலைவர் லெட்சுமணன், ஜமாத் தலைவர் முகம்மது இக்பால், கல்விக்குழுத்தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் நாகரஞ்சித் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவூதீன் வரவேற்றார். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் காஜா நிஜாமுதீன் குரைசி, ஜாகிர் உசேன் மற்றும் ஆசிரியர்கள் சகுபர் அலி, பரமேசுவரன், உடற்கல்வி ஆசிரியர் கமால் பாட்சா ஆகியோர் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் நன்றி கூறினார்.


Next Story