கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்


கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 11 Nov 2022 1:00 AM IST (Updated: 11 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் அடுத்த செருகளத்தூர் மற்றும் வடவேர் ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர்கள் மணி (செருகளத்தூர்), மல்லிகா வீரையன் (வடவேர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர். ராமலிங்கம், உதவி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சபாபதி, சி.பி.எப்.டி. உதவி இயக்குனர் டாக்டர் சாமிநாதன், மூத்த கால்நடை டாக்டர் ஈஸ்வரன் ஆகியோரின் உத்தரவின் படி வடவேர் கால்நடை மருந்தகத்தின் கால்நடை உதவி டாக்டர் சுரேந்தர் மற்றும் குழுவினர் ஆடு, மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்குதல், சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்குதல், சினை ஊசி போடுதல் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளை அளித்தனர். முகாமில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செந்தில்குமார், அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story