நீலாஞ்சனூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு சிறப்பு மருத்துவ முகாம்


நீலாஞ்சனூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே உள்ள நீலாஞ்சனூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் ரத்த பரிசோதனை, சினை பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டு, பெரியம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடை வளர்ப்போருக்கு தீவனப்பயிர் சாகுபடி, ஊது கால் தடுப்பு, கன்று வளர்ப்பு, மழைக்கால நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் சிறந்த கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் 750-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் கால்நடை பராமரித்து துறை உதவி இயக்குனர்கள் மணிமாறன், சண்முக சுந்தரம், கால்நடை உதவி டாக்டர்கள் திருமால், முத்து, கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணன், பராமரிப்பு உதவியாளர் சீனிவாசன், கும்மனூர் ஊராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story