மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 7 Jan 2023 6:45 PM GMT (Updated: 7 Jan 2023 6:46 PM GMT)

கிருஷ்ணகிரி கோட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கோட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், கிருஷ்ணகிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள், தங்களுடைய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி வரை கிருஷ்ணகிரி சந்தைபேட்டை, பெரியார் நகர், போகனப்பள்ளி, பெத்தனப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, மேல்சோமார்பேட்டை, லைன்கொல்லை, அகசிப்பள்ளி, தேவசமுத்திரம், பெரியகோட்டப்பள்ளி, மேல்கரடிகுறி, மேல்பட்டி, பி.ஜி.புதூர், செம்படமுத்தூர், தாளாப்பள்ளி, பாலகுறி, பூவத்தி, குந்தாரப்பள்ளி, தானம்பட்டி, நரணிகுப்பம் ஆகிய கிராமங்களில் முகாம் நடக்கிறது.

காவேரிப்பட்டணம் கோட்டத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், போத்தாபுரம் ரேஷன் கடை, பையூர் பெரியார் சிலை, நெடுங்கல் பஸ் நிறுத்தம், குண்டலப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி, தாசம்பட்டி கூட் ரோடு, மோரனஅள்ளி இந்தியன் வங்கி அருகில், அகரம் கூட் ரோடு, தட்ரஅள்ளி கூட் ரோடு ஆகிய இடங்களிலும் இந்த முகாம் நடக்கிறது.

31-ந் தேதி கடைசி நாள்

கிருஷ்ணகிரி பஜார் தெரு, தியாகரசனப்பள்ளி, காமன்தொட்டி, உலகம், சாமல்பள்ளம், நேரலகிரி, நல்லூர், நடுசாலை, இ.ஜி.புதூர், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், நாச்சிக்குப்பம் கூட் ரோடு ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் இணைப்பு எண், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தங்களது செல்போன் எண் ஆகியவற்றுடன் வர வேண்டும். மேலும், மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதனால் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story