தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய 4 உட்கோட்ட காவல் சரகம் உள்ளது. இந்த காவல் சரக்கத்தில் 29 காவல் நிலையங்கள் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் பல நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்காக நேற்று முன்தினம் தர்மபுரி வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதான வளாகத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். முகாமில், நிலப்பிரச்சினை, வழித்தட பிரச்சினை, பணம் கொடுத்தல்-வாங்கல் பிரச்சினை, குடும்பப் தகராறு, மோதல், முன்விரோதம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தீர்வு காணப்படாத மனுக்கள் தொடர்பாக கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.