அரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தர்மபுரி
அரூர்:
அரூர் பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட 10 போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருந்த மனுதாரர், எதிர் மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி, சமரச முறையில் தீர்வு காணப்பட்டது. அதன்படி 19 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story