மாவட்ட மைய நூலகத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் தர்மபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரி தலைமை தாங்கினார். முதல்நிலை நூலகர் மாதேஸ்வரன் வரவேற்று பேசினார். முகாமில் பட்டதாரி ஆசிரியர் முனிராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கதைகளை கூறி சிறப்புரையாற்றினார். முகாமில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் 2-ம் நிலை நூலகர் திருநாவுக்கரசு, நூல் கட்டுனர் சரவணன், மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் திருமலைக்குமாரசாமி மற்றும் மாவட்ட நூலக அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ- மாணவிகள், நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் இல்லம் தேடிக்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் 2-ம் நிலை நூலகர் சுப்ரமணி நன்றி கூறினார்.