ஓபிளிநாயக்கனஅள்ளி ஊராட்சியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்-முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடந்தது
மொரப்பூர்:
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓபிளிநாயக்கனஅள்ளி ஊராட்சியில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், சென்னகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வக்கீல் முனிராஜ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் ஓபிளிநாயக்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தனூர், ஓபிளிநாயக்கனஅள்ளி, கெடகாரஅள்ளி, அஸ்தகிரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களை கட்சியில் இணைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் நகர தி.மு.க. செயலாளர் மோகன், கடத்தூர் பேரூராட்சி தலைவர் மணி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் பச்சையப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து, கொன்றம்பட்டி என்.சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.