இலவச மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
காரைக்குடி
தி.சூரக்குடி ஊராட்சி மற்றும் காரைக்குடி தேவகி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் காரைக்குடி அருகே தி.சூரக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ஏ.ஆர்.முருகப்பன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத்தலைவர் ஆறு.முத்துலெட்சுமி முன்னிலை வகித்தார். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சுரேந்திரன், சிறப்பு மருத்துவர் செல்வகுமரன் ஆகியோர் சிகிச்சையளித்தனர். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஊர்க்காவலன், ஊராட்சி உறுப்பினர்கள் பெரியசாமி, ஜோதி, விஜயகுமாரி, சுரேஷ், செல்வி, செல்வம், அந்தோணிசவரி சாந்தி மற்றும் தி்.மு.க. அவைத்தலைவர் சூரக்குடி பழனியப்பன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மணிமேகலை உள்பட கிராம மக்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பவதாரணி நன்றி கூறினார்.