மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான முகாம்
வேட்டவலத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான முகாமை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தார்.
வேட்டவலம்
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான முகாம் வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெற்றது.
இந்த முகாம்களில் குடும்ப தலைவிகளிடம் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவங்களை பதிவேற்றும் பணிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது விண்ணப்பங்களை பதிவு செய்ய வந்த தாய்மார்களிடம் துணை சபாநாயகர் திட்டங்கள் குறித்து தெரிகிறதா என்பதை கேட்டறிந்தார்.
பின்னர் ஒவ்வொரு பயனாளிகளிடமும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என்று விண்ணப்பங்களை பதிவு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகையன், ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஜாய், பேரூராட்சி தலைவர் கவுரி நடராஜன், துணைத்தலைவர் ஜெயலட்சுமி, பேரூராட்சி உறுப்பினர்கள் தமிழரசி, புவனேஸ்வரி, சாந்தி, அன்சர், மணி, டேவிட், சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.