காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்


காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்
x

காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம் 19-ந்தேதி நடக்கிறது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக முதற்கட்டமாக காஞ்சீபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சீபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.

இந்த முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை - நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் - 4 உடன் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சீபுரம் என்ற முகவரியிலும் 044-29998040 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story