விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரசார கூட்டங்கள்


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரசார கூட்டங்கள்
x
தினத்தந்தி 29 July 2023 1:00 AM IST (Updated: 29 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு பிரசார கூட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜீவா, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட நிர்வாகி மனோகரன், தொ.மு.ச. மாவட்ட தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் சண்முகராஜா, கூட்டமைப்பு நிர்வாகிகள் சிவலிங்கம், முருகானந்தம், முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கவேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நல்லம்பள்ளி, நாகர்கூடல், பெரும்பாலை, பென்னாகரம், இண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேன் மூலம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார கூட்டம் நடத்தினர்.


Next Story