கல்லூரி மாணவிகளிடம் 'செல்பி வித் அண்ணா' என்று பிரசாரம் மேற்கொள்வதா? - கே.எஸ்.அழகிரி கண்டனம்


கல்லூரி மாணவிகளிடம்  செல்பி வித் அண்ணா  என்று பிரசாரம் மேற்கொள்வதா? - கே.எஸ்.அழகிரி கண்டனம்
x

கல்லூரி மாணவிகளிடம் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கைக்காக 'செல்பி வித் அண்ணா' என்று பிரசாரம் மேற்கொள்வதா? என கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. மகளிரணி சார்பில் 'செல்பி வித் அண்ணா' என்று போட்டி நடத்தப்படுவதாகவும், அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அழைக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அந்தப் பகுதியிலுள்ள அரசு கல்லூரிகளில் நடத்தப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

பா.ஜ.க.வினரின் இத்தகைய மலிவான முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தோன்றிய பிறகு, கல்லூரி வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர். இத்தகைய முயற்சிகளை கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும்.

ஏற்கனவே, புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் பா.ஜ.க. எடுத்த முயற்சிகளுக்கு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் 'செல்பி வித் அண்ணா' என்று பிரசாரம் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story