மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கற்பூர வியாபாரி பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கற்பூர வியாபாரி பலி
x

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கற்பூர வியாபாரி இறந்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

கற்பூர வியாபாரி

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் வடிவேலு (வயது 36). இவர் கற்பூரத்தை ஒட்டுமொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஹேமலதா (28). அவர்களுக்கு தேவகிருஷ்ணா (1½) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் கடைகளுக்கு கற்பூரத்தை விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சேலத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் ராசிபுரம் அருகே உள்ள சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மசக்காளிப்பட்டி அருகே சென்ற போது அவருக்கு பின்னால் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட வடிவேலு படுகாயம் அடைத்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் வடிவேலுவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது வடிவேலு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வடிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடிவேலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.


Next Story