பயனாளிகள் விண்ணப்பிக்க 325 இடங்களில் முகாம்கள்


பயனாளிகள் விண்ணப்பிக்க 325 இடங்களில் முகாம்கள்
x
தினத்தந்தி 14 July 2023 6:45 PM GMT (Updated: 14 July 2023 6:45 PM GMT)

மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்க 325 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்

ராமநாதபுரம்

மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்க 325 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

325 இடங்களில் முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தமிழக அரசின் சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக பயனாளிகளின் தகுதிகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இந்த திட்டம் தொடர்பாக மாவட்டத்தில் 325 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் செய்து கொடுக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

மேலும், ரேஷன் கடைகளில் விண்ணப்பம் வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், நேர்முக உதவியாளர் மாரிச்செல்வி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story