மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வட்டார அளவில் முகாம்கள்


மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வட்டார அளவில் முகாம்கள்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்க வட்டார அளவில் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்க வட்டார அளவில் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய அடையாள அட்டை

1 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் புதிய தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை மறுமதிப்பீடு செய்வதற்கு மாவட்ட அளவில் வட்டாரம் தோறும் முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

சிறப்பு முகாம்கள்

இதற்காக வட்டார அளவில் முகாம்கள் நடைபெற உள்ளது. 4.2.2023 அன்று சீர்காழி வட்டாரத்தில் சீர்காழி டி.எஸ்.எம். உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும், 7.2..2023 அன்று செம்பனார்கோவில் வட்டாரம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 9.2.2023 அன்று கொள்ளிடம் வட்டாரம் துளசேந்திரபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 10.2.2023 அன்று குத்தாலம் வட்டாரம் குத்தாலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 13.2.2023 அன்று மயிலாடுதுறை வட்டாரம் மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியிலும் காலை 9.30 மணிமுதல் 1.30 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஆதார் அட்டை நகல்

ஏற்கெனவே விண்ணப்பித்து அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு அட்டை பெறலாம். மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, கைபேசிஎண் ஆகியவற்றுடன் கலந்துகொன்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story