திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாகத் தேர்வு


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாகத் தேர்வு
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல்துறை சார்பில் வளாகத் தேர்வு நடைபெற்றது. சிங்கப்பூரை தலைமை இடமாக கொண்ட சென்னை சிக்ஸ்டார் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் என்ற மென்பொருள் நிறுவனம் இந்த தேர்வை நடத்தியது. இதில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் சி.வேலாயுதம் வளாகத் தேர்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர் பாலகிருஷ்ணன், சிக்ஸ்டார் கன்சல்டன்சி நிறுவன இணை நிறுவனர் சுப்பிரமணிய சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்வான மாணவர்களை முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

1 More update

Next Story