கட்டங்குடி விலக்கு நான்கு வழிச்சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
கட்டங்குடி விலக்கு நான்கு வழிச்சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியிலிருந்து கட்டங்குடி, பொய்யாங்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.
இந்த சாலையை கடந்து தான் வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு ஐ.டி.ஐ, ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு செல்ல வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் விபத்தை தடுப்பதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை.
போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லை. இதனால் சில சமயங்களில் விபத்து விடுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பாளையம்பட்டியிலிருந்து கட்டங்குடி, பொய்யாங்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவா்கள் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் மின்விளக்கு வசதி சரியாக இல்லை. ஆதலால் சில சமயங்களில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஆதலால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நான்குவழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் பொருத்தி விபத்து ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.