சேதம் அடைந்த பரண் சீரமைக்கப்படுமா?


சேதம் அடைந்த பரண் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 4 July 2023 2:30 AM IST (Updated: 4 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

சேதம் அடைந்த பரண் சீரமைக்கப்படுமா?

கோயம்புத்தூர்

கோவை

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி பகுதியில் புகழ் பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழி, வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்தது ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பூண்டி பகுதிக்கு செல்லும் பிரிவில் மரத்தின் மீது மரக்கட்டைகளால் ஆன பரண் அமைக்கப்பட்டது. அதில் இருந்து வனவிலங்குகள் நடமாட்டத்தை வனத்துைறயினர் கண்காணித்து வந்தனர். அந்த பரண் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை. இதனால் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் திடீரென்று வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்த பக்தர்கள் கூறும்போது, பூண்டி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு. இங்கு வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க மரத்தின் மீது பரண் அமைக்கப்பட்டது. குறிப்பாக யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். அந்த பரண் சேதம் அடைந்து கிடப்பதால், வனவிலங்குகளை கண்காணிக்க முடிவது இல்லை. எனவே பரணை சீரமைத்து கண்காணிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story