அதங்குடி பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?


அதங்குடி பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 4:47 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே அதங்குடி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

பாசன வாய்க்கால்

கூத்தாநல்லூர் அருகே உள்ள அதங்குடியில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் கோரையாற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள 250 ஏக்கர் வயல்களில் நெல், உளுந்து, பயறு மற்றும் பருத்தி சாகுபடி பணிகளை விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக அதங்குடி பாசன வாய்க்காலை அடர்ந்த காடுகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. பாசன வாய்க்காலின் நடு மையத்தில் கருவேல மரங்கள், கோரை நார்கள், புதர் செடிகள் அடர்ந்து சூழ்ந்து உள்ளது. இதனால் பாசன வாய்க்கால் இருக்கும் இடமே தெரியாமலும், சில இடங்களில் வாய்க்கால் குப்பைகளால் மேடான பகுதியாகவும் காணப்படுகிறது.

தூர்வார வேண்டும்

இதனால் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் வயல்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. சில நேரங்களில் ஆற்றில் தண்ணீர் வரும் போது கூட பாசன வாய்க்கால் மூலம் தேவையான தண்ணீர் கிடைக்காததால், பயிர்கள் தண்ணீர் இன்றி வாடும் நிலை ஏற்படுகிறது. அப்போது, பம்புசெட் வைத்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. எனவே அதங்குடி பாசன வாய்க்காலை சூழ்ந்த காடுகள் மற்றும் புதர் செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

1 More update

Next Story