இதுக்கெல்லாமா...? வாட்ஸ்-அப்ல ஸ்டேட்டஸ்...! பொதுமக்கள் கவலை


இதுக்கெல்லாமா...? வாட்ஸ்-அப்ல ஸ்டேட்டஸ்...! பொதுமக்கள் கவலை
x

கோவையில் சில இளைஞர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு சம்பவத்தை இளைஞர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்- அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து இருக்கிறார்.

கோவை,

கோவையை அடுத்த துடியலூர் என்.ஜி.ஜி.ஓ.காலனி பகுதியில் சில இளைஞர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அது பின்னர் அடி-தடியாக மாறியது.

இந்த நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் அந்த தகராறு சம்பவத்தை தனது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்- அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து அதை டிரெண்டிங் செய்து இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறும்போது, இன்றைய இளைஞர்களின் தற்போதைய நடவடிக்கைகள் கவலை அளிப்பதாகஉள்ளது. இதுக்குமா....இதுக்கெல்லாமா? வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்....என்கிற நிலை அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இளைஞர்களின் எதிர்காலத்துக்கான வாய்ப்புகளை இதுபோன்ற தவறான செயல்கள் பாதிக்கும்.பெற்றோர்கள் என்னதான் கண்காணித்தாலும், பிள்ளைகள்தான் திருந்த வேண்டும். நண்பர்களாக இருந்தாலும், மனக்கசப்புகள் வருவது இயல்புதான். ஆனால் அதனை பேசி தீர்க்க வேண்டும் என்றனர்.


Next Story