மாற்றுத்திறனாளி மாணவனின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவுமா?


மாற்றுத்திறனாளி மாணவனின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவுமா?
x

அய்யம்பேட்டை அருகே மாற்றுத்திறனாளி மாணவனின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவுமா? என்று பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனா்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை அருகே மாற்றுத்திறனாளி மாணவனின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவுமா? என்று பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனா்.

பள்ளத்தில் தவறி விழுந்தார்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பழைய மாத்தூர் வடுகதெருவில் வசித்து வருபவர் செல்வம் (வயது52). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரிதா(43). இவர்களுக்கு ஆதித்யா(19) என்ற மகனும், அபிநயா (20), கீர்த்தனா (10) என்ற 2 மகள்களும் உள்ளனர்.இவர்களது மகன் ஆதித்யா 5-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது பள்ளத்தில் தவறி விழுந்து விட்டார். அப்போது முதல் இவரால் சரிவர நடக்க முடியாமல் போனது. இதற்கு பல மருத்துவர்களிரிடம் சிகிச்சை பெற்றும் எவ்வித பலனும் இல்லை.

அறுவை சிகிச்சை

இந்தநிலையில் இவரது வலது கால் மூட்டின் மேற்பகுதியில் கேன்சர் கட்டி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்து முழங்கால் மூட்டினை அகற்றி விட்டனர். தற்போது ஆதித்யா அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11- ம் வகுப்பு படித்து வருகிறார்.மாற்று திறனாளியான இவர் தினமும் பள்ளிக்கு செல்லும்போது நடப்பதற்கு சிரமப்பட்டு ஊன்றுகோல் உதவியுடன் சென்று கல்வி பயின்று வருகிறார். இந்த மாணவருக்கு மீண்டும் முழங்கால் மூட்டு வைத்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு பல லட்ச ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு உதவ கோரிக்கை

எனவே தங்கள் மகனின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என ஆதித்யாவின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-தினமும் கூலி வேலைக்கு சென்று வாழ்வாதாரம் இன்றி 3 குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறோம். மாற்றுத் திறனாளியான ஆதித்யா நன்றாக நடப்பதற்கு உரிய அறுவை சிகிச்சை செய்வதற்கும், கல்வி படிப்பை தொடர்வதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story