கோபி அருகே வாய்க்கால் கரையோரம் மீட்கப்பட்ட பெண் குழந்தை நல குழுமத்திடம் ஒப்படைப்பு
கோபி அருகே வாய்க்கால் கரையோரம் மீட்கப்பட்ட பெண் குழந்தை நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது
கோபி அருகே வாய்க்கால் கரையோரம் மீட்கப்பட்ட பெண் குழந்தை நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தை
கோபி அருகே வண்டிபாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் நேற்று முன்தினம் வெகு நேரமாக 2½ வயது பெண் குழந்தை நின்றுக்கொண்டு பால் புட்டியுடன் அழுது கொண்டிருந்தது.
உடனே அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் கரையோரம் சென்று அங்கு யாராவது இருக்கிறார்களா? என்று தேடி பார்த்தனர். ஆனால் யாரும் இல்லை. இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நல குழுமத்திடம் ஒப்படைப்பு
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமார் என்பவரது குடும்பத்தில் போலீசார் ஒப்படைத்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் குழந்தையை பாதுகாத்து வந்தனர்.
ஆனால் குழந்தைக்கு நேற்று காலை வரை யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல காப்பக அலுவலர் திரை ஜூலியட், எட்வின் சார்லஸ் ஆகியோர் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி குழந்தையை ஒப்படைத்தார்.