கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்


கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
x

பணகுடி பேரூராட்சியில் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி பேரூராட்சி 16-வது வார்டு மங்கம்மாள் சாலை மியா புதுக்குளம் கால்வாயில் தண்ணீர் போகாமல் தேங்கி நின்றதால் கொசு தொல்லை மற்றும் சுகாதாரகேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக வார்டு கவுன்சிலர் பூங்கோதை மற்றும் பொதுமக்கள் கால்வாயை தூர்வாரி சீர்படுத்தும்படி பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணனிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் சீர்படுத்தும் பணியை பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர்தாஸ், துணை தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணன் தொடங்கி வைத்தார். நியமனக்குழு உறுப்பினர் கோபி கோபாலகண்ணன், இளநிலை பொறியாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story