கால்வாய் தூர்வாரும் பணி


கால்வாய் தூர்வாரும் பணி
x

நெல்லையில் கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, வருகிற மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தச்சநல்லூர் மண்டலம் 10-வது வார்டு வண்ணார்பேட்டை பரணி நகரில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், சாக்கடை கால்வாய் அடைப்பு அகற்றல், கால்வாய்களில் மண் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்த பணியை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ மற்றும் 25 தூய்மை பணியாளர்கள் இப்பணியினை மேற்கொண்டனர். மேலும் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் கால்வாய் தூர்வாரப்பட்டது.


Next Story