கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்


கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
x

கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் சமீபத்தில் பெய்து வரும் மழையால் நகரின் சில பகுதிகளில் மழை நீர் செல்ல வழியில்லாமல் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இது குறித்து அறிந்த காரைக்குடி நகர மன்ற தலைவர் முத்துத்துரை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று உடனடி நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் 6 ஜே.சி.பி. எந்திரங்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மழை நீர் செல்ல வழி இல்லாமல் உள்ள பகுதிகளின் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் மின் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. சேதமடைந்த சிறு பாலங்கள் மற்றும் நீர் நிலைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 10 வருடங்களாக முறையாக தூர்வாரப்படாத 16 கி.மீ. தூர கால்வாய்களை தூர்வாரி சீரமைத்த நகராட்சி நிர்வாகத்தை மக்கள் பாராட்டினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் லட்சுமணன், என்ஜினீயர் கோவிந்தராஜன், உதவி என்ஜினீயர் சீமா, நகர் மன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.



Next Story