36 மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு


36 மின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2023 10:56 PM GMT (Updated: 30 Oct 2023 6:23 AM GMT)

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை 36 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை எழும்பூர் வழித்தடத்தில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (31-ந் தேதி) காலை 10.45 மணி முதல் மதியம் 3.45 மணி வரையில் 54 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 10.18 மணி முதல் மதியம் 2.45 மணி வரையில் தாம்பரம் வரை இயக்கப்படும் 19 மின்சார ரெயில்கள் ழுழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து காலை 9.08 மணி முதல் மதியம் 3.20 மணி வரையில் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் 17 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 36 ரெயில்கள் ழுழுவதுமாக ரத்து செய்யப்படுகியது.

அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, 1.45, 2.15 மற்றும் 2.30-க்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து காலை 11 மணி, 11.30, 12 மணி, 1 மணி, 1.45, 2.20 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரெயில், செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில், தாம்பரத்திலிருந்து மதியம் 2.57 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரெயில், காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு ரெயில்கள்

மேலும், பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் காலை 11.51, மதியம் 12.35, 1.15, 1.35, 1.55, 2.45, 3.10, 3.30 ஆகிய நேரங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, 11 மணி, 11.30, மதியம் 12 மணி, 1 மணி, 1.45, 2.20 ஆகிய நேரங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story