தந்தையை கவனிக்க தவறிய மகனின் சொத்து பத்திரப்பதிவு ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு
தந்தையை கவனிக்க தவறிய மகனின் சொத்து பத்திரப்பதிவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
எனக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஓய்வுபெறும்போது கிடைத்த பணத்தை கொண்டு நீலாங்கரையில் நிலம் வாங்கினேன். என் மனைவி விபத்தில் இறந்து விட்டதால், என்னை கடைசி காலம் வரை பார்த்துக்கொள்வதாக கூறி, நீலாங்கரை நிலத்தை என்னிடம் இருந்து என் கடைசி மகன் எழுதி வாங்கினார். ஆனால், அதன் பின்னர் என்னை பார்க்கக்கூட வரவில்லை. சொத்தை பெற்றுக்கொண்டு என்னை ஏமாற்றியதால், மகனின் பெயருக்கு எழுதி கொடுத்த பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி கிண்டி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தேன்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, சொத்தை திருப்பிக்கொடுக்க தயாராக இருப்பதாகவும், ஆனால், நான் வாங்கும் கடனுக்கு பொறுப்பு ஏற்க முடியாது என்றும் என் மகன் கூறினார்.
தள்ளுபடி
இப்படி சொல்லியும் பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியாது என்று கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நான் செய்த மேல்முறையீட்டை சென்னை கலெக்டரும் தள்ளுபடி செய்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல் என்.மனோகரன் ஆஜராகி, "மனுதாரருக்கு பிற மகன்கள், மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதிட்டார்.
பத்திரப்பதிவு ரத்து
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கடைசி காலத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்று ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கியிருப்பது உறுதியானால், அந்த சொத்தின் பத்திரப்பதிவை மூத்த குடிமக்கள் சட்டம் பிரிவு 21 (3)-ன்படி ரத்து செய்ய முடியும். ஆனால், இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக கலெக்டரும், கோட்டாட்சியரும் செயல்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சொத்தை எழுதி வாங்கிய மகனுக்கும், அவரது தந்தைக்கும்தான் பிரச்சினையே தவிர மற்ற மகன்கள், மகள்களுடன் பிரச்சினை இல்லை. எனவே, மனுதாரரின் கோரிக்கையை கலெக்டர், கோட்டாட்சியர் நிராகரித்தது, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தை தோல்வி அடையச் செய்து விடக்கூடாது. எனவே, கலெக்டர் உத்தரவையும், நீலாங்கரையில் உள்ள நிலத்தை மகனுக்கு எழுதிக்கொடுத்த பத்திரப்பதிவையும் ரத்து செய்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.