புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி


புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி, பிப்.5-

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மருந்தியல் பிரிவு சார்பில் நேற்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புற்றுநோய் மருந்தியல் பிரிவு மருத்துவ உதவி பேராசிரியர் காந்திமதி தலைமை தாங்கினார். கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை தலைவர் லலிதா சுப்பிரமணியன் புற்றுநோய் விழிப்புணர்வு உரையாற்றினார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பேசினார்.

முடிவில் புற்றுநோய் மருந்தியல் பிரிவு மருத்துவ இணை பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார். இதில் மருத்துவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story