புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சியில் புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் சீனிவாசன் மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி தலைமை தபால்நிலையம், அகிலஇந்திய வானொலிநிலையம், எம்.ஜி.ஆர்.சிலை வழியாக அரசு மருத்துவமனை அருகே நிறைவு பெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் புற்றுநோய்க்கு எதிராகவும், புகையிலை பொருட்களுக்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு, தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story