கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தியதாக கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தியதாக கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கஞ்சா கடத்தல்

தஞ்சை மாவட்டத்தில் தமிழகஅரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா, பான்மசாலா விற்பனை செய்பவர்களை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சிலர் லாரியின் மூலம் தஞ்சை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி தஞ்சை கோடியம்மன்கோவில் அருகே தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த லாரியை தனிப்படையினர் வழிமறித்து சோதனை நடத்தியபோது, லாரியில் பொட்டலங்கள் அதிகஅளவில் இருந்தது தெரியவந்தது. அந்த பொட்டலங்களில் என்ன இருக்கிறது என பார்த்தபோது அதனுள் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

2 பேர் கைது

இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். மொத்தம் 285 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். மேலும் லாரியில் இருந்த 2 பேரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தபோது அவர்கள் மதுரை மாவட்டம் சிறுதூர் கிராமம் வளர்பொதிகை மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த ராமசாமி மகன் ஹல்க் கார்த்திக் (வயது33), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சிவலிங்கபுரம் வடக்குதெருவை சேர்ந்த முத்தையா மகன் டிரைவர் ரகுநாதன் (37) ஆகியோர் என்பதும், இவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.பிடிப்பட்ட 2 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கைதான 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் சமர்ப்பித்தார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து ஹல்க் கார்த்திக், ரகுநாதன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் மேற்கு போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story